Thursday, February 16, 2023
Wednesday, February 15, 2023
என்னவன்!
நான் கண்டெடுக்கவில்லை உன்னை,
ஆனால்
கண்டவுடன் எடுத்துக்கொள்ள நினைத்தேன்,உன்னை !
சேர்ந்தோம், சிரித்தோம் , அழுதோம் ,
அழுதோம் , சிரித்தோம் , சேர்ந்தோம் ,ரிபீட்டு
ஆயிரம் தான் நீ என்னமோ என்னவனானாலும்
எனக்கானவனாக சில காலம் ஆகும் தானே !
ஆரம்ப கால காதலில் எல்லாம் புதிது
நீயும் புதிது !நானும் புதிது !நமக்கும் புதிது !
ஒன்றில் ஆரம்பித்து பதினொன்றை தாண்டிச் செல்கிறது
கல்யாணத்தில் சேர்ந்து !காதலில் கலந்து !நட்பாய் உணர்ந்து !நாமாய் ஆனோம் !
என்றும் நமக்காக நாமாய் இணைந்தே இருப்போம் !
- இப்படிக்கு உன்னவள்
Posted by SowmyaS at 8:47 AM 0 comments
Subscribe to:
Posts (Atom)