Thursday, December 24, 2009

மழைத்துளி ...


மண்ணும் மழைத்துளியும் சேர்ந்திருக்கும்
நேரம் சிறிதாக இருந்தாலும்
அவை சேர்ந்து தரும் மணம்
விண்ணிலும் வீசும்
அது போல தான்
நாமும் நம் நட்பும் ....

மௌனம் ...

மௌன மொழியின் அர்த்தம் அறிந்தேன்
நீ என் அருகில் இருக்கையில்
உன் பிரிவு எடுத்து சென்றது என் மௌனத்தை ....

சில ....


பார்த்த நாட்கள் சில
பழகிய நாட்கள் சில
பகிர்ந்த நாட்கள் சில
பேசிய நாட்கள் சில
நாட்கள் சிலவாயினும்
நட்பு பலவாயின .....

நட்பு....

I wrote this poem for  my  friend smita ...


   


நட்பு பிறந்தது என் நா
உரைத்த "ஹாய்" இல்
நட்பு வளர்ந்தது நம்
மொழி பரி மாற்றத்தால்
நட்பு சிறந்தது நம்
சிறு நகையால்
நட்பு பெருகியது நம்
பெயர் வரிசையால்
நட்பு மலர்ந்தது
நம் நட்பின் மணம் கமழ்ந்தது
மற்றவர் இடையில்
புகழ்பவர் புகழ்ந்தார்
இகழ்பவர் இகழ்ந்தார்
பிரிக்க முயன்றவர் சிலர்
பிரிந்தும் ஒன்றாய் இருந்தோம்
இனியும் இருப்போம் என்ற உறுதியுடன் .....

சாதனை ...



கண்ணுக்குள் ஒளிந்து
கனவில் பிறந்து
கற்பனையில் வளர்ந்து
காலங்களில் கலந்து
கடைசியில் என்னை அடைந்தது - சாதனை

காத்திருந்தேன் ....




காத்திருப்பதன் கொடுமை கலைந்தது
அவள் வருகையை பார்த்திருந்ததால் ....

கண்ணீர் ....



கண்ணுக்குள் ஒளிந்திருந்தேன்
கடலாய் அலைந்து
வெள்ளமாய் ஓடி
கடைசியில் கரையை அடைந்தேன்
அவன் அவளிடம் சொன்ன ஒரு வார்த்தையால்
நான் உன்னை காதலிக்கிறேன்!!!
                                                                    -கண்ணீர்

Saturday, May 2, 2009

உன்னால் ....

சுட்டெரிக்கும் சூரியனும் சுருங்கி போனது
வட்டமிடும் வெண்ணிலவும் வலு இழந்தது
ஆர்பரிக்கும் அலைகளும் அமைதியானது
வீசும் புயலும் வீரியம் இழந்தது
கொழுந்து விடும் நெருப்பும் குலைந்து போனது
உன் முகம் பொலிவிளைந்ததால் ....

பாரம் ...


பூமித்தாயே ....
என்னை மன்னித்து விடு
இன்று உன் பாரத்தை அதிகரித்து விட்டேன்
ஏன் என்றால் என் மனம் பாரமாக உள்ளது ....

மயில் ...

கண்கவர் வர்ணம் பல கொண்டு
வானளவ நீ பறந்தால்
என் மனம் பறக்கிறது உன் அழகுசொலையில் .....

மலர்வாய்...


அந்தியில் மறையும் கதிரவன்
அதிகாலை மலர்ந்த மலரை கண்டு
சொன்னது
நான் மறைகிறேன்
நீ மலர்கிறாய் .....

கவிதை ....

பக்கம் பக்கமாய் கவிதை எழுதினேன்
அவை அனைத்தும் பறந்து போனது
உன் கண்கள் தீட்டிய கவிதையால் .....

உன் புகழ் ...

கேளாத காதும் கேட்கும்
உன் மௌன மொழியை
காணாத கண்ணும் காணும்
உன் முக சிரிப்பை
பேசாத இதழும் பேசும்
உன் பெயர் சுவையை .....

தேடினேன் ...


எங்கெங்கோ தேடினேன் எங்கயும் நீ இல்லை
எப்பொழுதும் தேடினேன் ஒரு பொழுதும் நீ இல்லை
என்னாலும் தேடினேன் ஒரு நாளும் நீ இல்லை
பின்பு
என்னுள் தேடினேன் மலராய் மலர்ந்திருந்தாய்
மகிழ்ச்சியில் துளைத்தேன்
மனதையும் துளைத்தேன்
மகிழ்ச்சியோடு !!!!!!!

கனவு ...


கனவுகளோடு கவிதை எழுதினேன் என் காதலிக்காக
கனவுகள் களைய காணமல் போனது
கவிதை அல்ல என் காதலி ......

சுனாமி ...


பறவையே உன்னால் மட்டும் தான் பறக்க முடியுமா ?
என்னாலும் முடியும் என்று உயர பறந்தது கடல்
அதன் விளைவுதன் சுனாமி ......

Wednesday, March 11, 2009

அர்ச்சனை ...


"அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு
அதிர்ஷ்டங்களை தரச்சொல்லி வேண்டினால்
என் தெய்வம் அதிர்ஷ்டங்களை தல்லி வைத்து
அர்ச்சனைகளை வாங்கித் தருகிறது
தினமும் அம்மா விடம் !!!! "

Wednesday, March 4, 2009

என்னுள் நீ ....


"என்னுள் நீ , உன்னுள் நான்(?)
என்றிருக்கும் போது
நீ நலம் இல்லை என்றால்
உனக்குள் இருக்கும்
நான் மட்டும் எப்படி நலமாய் இருப்பது
பத்திரமாக பார்த்துக்கொள்
உன்னையும் உன்னுள் இருக்கும் என்னையும் !!!!!!"

உணர்வுகள் ....


"உடலால் பிரிந்திருந்தலும்
உணர்வுகளால் ஒன்றாய் இருந்தோம்
இன்று என் உணர்வுகளும் துடித்தன
உன் உடல் நிலை சரி இல்லாததால் !!!!!!!!"

கொடியது ....


"மரணத்திலும் கொடியது


தோழி நலமாய் இல்லை


என்றறிந்தும் நாடிச் சென்று


பேசி பார்க்க முடியாத நிலை !!!!!"

Monday, February 23, 2009

கடல் அலை ..


"கடலின் அலையை ரசித்தோம் ஒன்றாய்
இன்று என் கண்கள் கடலானது உன் பிரிவால்
அதில் சுனாமி வரும் முன்
வந்து விடு என்னிடம் !!!!"

காதலித்தேன் ....


"காதலித்தால் தான் கவிதை வரும் என்றால்
ஆம் காதலித்தேன்
நெருப்பின் நிறத்தை
மண்ணின் மணத்தை
நீரின் சுவையை
காற்றின் மொழியை
வானின் அழகை
காதலித்தேன் !!!!!!!!!"

ஓவியம் ...


"காதல் காவியம் தீட்ட மை கொஞ்சம் கேட்டேன்
அதில் பொய் ஒன்றும் இல்லை
பின்பு தான் தெரிந்தது தீட்டியது
காவியம் அல்ல காதலியின் ஓவியம் என்று !!!!!"

சமத்துவம் ...


"சமாதியிலும் சமத்துவம் இல்லை என்றால்
சாதிக்குத்தான் சமாதி கட்ட வேண்டும் !!!!"

என்றும் அழியாது ...


"நெருப்பிலும் கருகாது
நீரிலும் மூழ்காது
காற்றிலும் கரையாது
மண்ணிலும் மக்காது
வானிலும் அழியாது
நான் உன் மீது கொண்ட நட்பு !!!!!!!! "

Sunday, February 22, 2009

மனம் திறக்குமா


"மலர்ந்தால் தான் பூவுக்கும் மணம் உண்டு
மனம் திறந்தால் தான் காதலுக்கும் இடம் உண்டு
மனம் திறக்குமா ?? அவன்  காதலுக்கு இடம் கிடைக்குமா ??? "

தோழியே....


"கல்லூரியில் ஒன்று சேர்ந்தோம்
வகுப்பறையில் விவாதம் செய்தோம்
சாலையில் ஒன்றாய் நடை பயின்றோம்
உணவை ஒன்றாய் பரிமாறினோம்
பேருந்தில் ஒன்றாய் பயணித்தோம்
சண்டைகளுக்கும் பஞ்சமில்லை
சமாதானமும் உடனே இல்லை
எதிரும் புதிருமாய் இருந்தாலும்
இணைந்தே இருந்தோம்
என்னை நீ அறிந்தாய்
உன்னை நான் உணர்ந்தேன்
அனைவரும் நம்மை அறிவர்
நல்ல தோழிகள்  என்று
பேசாத நாளே இல்லை என்பது போய்
பேசியது எந்த நாள் என்றானது
ஏனோ பிரிந்தோம்
மறுபடி சேர்வோமா ????????? "

Tuesday, February 17, 2009

பணம் ...


"சில்லறை சத்தம் கேட்காத இடம்
கல்லறை தானோ ?????
அங்கும் கேட்டால்
எங்கு தான் போவது ????? "

பிரிவு ....


"நட்பு என்ற மூன்றெழுத்தில்
சந்தித்த நாம்
பிரிவு என்ற மூன்றெழுத்தை
சந்திப்போமா அல்லது
சந்திக்கத்தான் சிந்திப்போமா ??????????? "

காவியம் ....


"காதல் ஒன்றும் கற்பனை அல்ல
கலைந்து போவதற்கு
காலம் காலமாய் நிலைத்து நிற்கும்
சரித்திரக் காவியம் !!!!!! "

Monday, February 16, 2009

நீ ....


"சிந்திப்பது நான் என் சிந்தனையில் நீ
காண்பது நான் என் கனவில் நீ
கேட்பது நான் என் செவியில் நீ
உணர்வது நான் என் உணர்வில் நீ
நீ இன்றி நான் இல்லை
நாம் இன்றி வேறில்லை !!!!!!!! "

நட்பு ....


"கண்ணீர் துடைக்க கை கொடுத்தது
தலை சாய்க்க மடி கொடுத்தது
களைப்பாற தோள் கொடுத்தது
சந்திப்பில் முகம் மலர்ந்தது
பிரிவில் விடை கொடுத்தது
உன் நட்பு !!!!!!!!! "

சேர்ந்திருப்போம் ....


"இரவும் பகலும்
நிழலும் நிஜமும்
நீரும் நெருப்பும்
வானும் மண்ணும்
இவை யாவும் சேரும் வரை
நாம் சேர்ந்திருப்போம் !!!!!! "

நீயும் நானும் ....


"கடலும் அலையும் போல
கனவும் நினைவும் போல
இமையும் விழியும் போல
உடலும் உயிரும் போல
கவியும் கவிதையும் போல
உளியும் ஓசையும் போல
நிலவும் ஒளியும் போல
இதயமும் துடிப்பும் போல
நீயும் நானும் !!!!!!!!!!!!!! "

சாதனை....


"இளைஞனே எழுந்திரு
இமயம் செல்ல
தியானிப்பதற்கு அல்ல
சாதிப்பதற்கு !!!!!!!! "

காதல்....


"காதல் தோல்வி
காதலுக்கு அல்ல
காதலர்களுக்கு "

ஈரம் ...


"ஈரம் மண்ணில் மட்டும் அல்ல
மனதிலும் அழகுதான் !!!!!! "
"ஈரம் மண்ணில் மட்டும் அல்ல
மனதிலும் மணம் வீசும் !!!!!! "

நம்பிக்கை .....


"நாணலின் அழகு நாணம்
என்றால்
நட்பின் அழகு நம்பிக்கை/நாம் "

நட்பு ....


"நட்பெனும் சொர்க்கத்தில் நடை பழகினோம் ஒன்றாய்
இன்று பிரிவெனும் பாதையில்
பயணிக்கிறோம் தன்னித்தனியே "

Sunday, February 15, 2009

மனம் ....


"கண்கள் இரண்டு காண்பது ஒன்றை
காதுகள் இரண்டு கேட்பது ஒன்றை
நாசிகள் இரண்டு நுகர்வது ஒன்றை
கைகள் இரண்டு அணைப்பது ஒன்றை
இருப்பில் ஒன்று நினைப்பில் கோடி - மனம் "

My First Post...


Hi...
Let me start my first post with the first tamil poem i wrote....

"தன் உயிர் தந்து உன் உயிர் கொடுத்தால்
தன் பசி நீக்கி உன் பசி போக்கினால்
தன் உதிரம் கொண்டு உன் உயிர் வளர்த்தால்
தன் மூச்சை உன் மூச்சாய் கொண்டால்
தனக்கென இல்லாமல் உனக்கென இருந்தால்
தன்னுள் உனக்கு இடம் கொடுத்தவளுக்கு
நீ கொடுத்தது முதியோர் இல்லம் "
Respect your parents till your last breath.They are the living GOD s on earth to take care of you in all your efforts and giving the best in everything.

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008