Friday, May 6, 2011

வரவேற்பு

வானம் திரண்டு வர
விண்மீன்கள் கூட்டம் கூட
சந்திரனை முன்னே அனுப்பி
சூரியனும் உடனே வர
வண்ணத்துபூச்சிகள் வந்த வண்ணம் இருக்க
பூக்கள் யாவும் புன்னகை மணம்  வீச
சொந்தங்கள் யாவரும் கூடி நிற்க
கெட்டி மேளம் கொட்ட
செல்வி திருமதி ஆகும் நேரம் வந்தது
வந்து வாழ்த்தி செல்ல அன்புடன் அழைக்கும்  --- சௌமி

Wednesday, April 27, 2011

சுனாமி


அலைச்சலை  
அலடிக்கொல்லாமல்
ஆர்பரித்து
அலைபாயும்
அழகை
ஆயிரம்  கண்  
ஆசையோடு  காண
அந்த  ஒரு  நாள்
ஆக்க்ரோசம்  ஆனது  ஏன்  ????? ---- சுனாமி

Thursday, March 31, 2011

காத்திருக்கிறேன்...

எழுதி வைத்தான் கடவுள் இவனொடுதான் என்று
அதன் படி என்னைக் காண வந்தான் சுற்றத்தோடு
அளவான அலங்காரத்துடன்  என்னை  அழைத்து வந்தால் என் அக்கா
அனைவரையும்  வணங்க  சொல்ல  அதையும்  அழகாக  செய்தேன் ....
பின்பு  அமர  சொன்னார்கள் .......
அமர்ந்தேன்  தந்தையின்  அருகில் 
சிறிது  வெக்கத்துடன்  தலை குனிந்து .....
முழுதாய்  பார்க்க  வில்லை  என்றாலும்  முடிந்தவரை  பார்த்தேன் ...
முதல்  பார்வையிலேயே  தோன்றிற்று   இவன்  தான்  என்னவனோ  என்று  (அவனுக்கும்  தோன்றிருகுமோ???).....
எங்கிருந்தோ  ஒரு  குரல் .... "மாப்பிள்ளை  பொண்ணு கிட்ட  பேசனுமாம் "....
அதுவரை  அமைதியாய் இருந்த  என்  மனம்
படபடத்தது  பட்டாம் பூச்சியின்  சிறகைப்  போல ....
என்னை  நானே அமைதிப்படுத்திக்  கொண்டேன் ...
அழைத்து  சென்றார்கள்  ஓர் அறைக்குள் .....
அடக்கமாய்  அமர்ந்தேன்  அவருக்கு  எதிரில் ...
அன்பாய்  சில  கேள்விகள்  அவரிடம்  இருந்து ....
அதற்கு  பண்பாய் நான் பதில்  சொல்ல ......
விடை  பெற்றார்கள்  விருப்பத்துடன்.....
சில  நாட்கள்  கழிந்தன ....
இருபுறமும்  சம்மதக்கொடி பறந்தன ....
கை  கோர்க்கும்  நாளும்  குரித்தாயின...
பின்பு  என்ன .... மனம்  ஆகும்  முன்  மனப்  பரிமாற்றம்  தான் ...
தினம்  தினம்  சந்திப்பு ....சில  மணி  நேர  பேச்சு ....
காத்திருப்பது  கடினம்  தான்  ஆயினும்  காலத்தின்  கட்டாயம் ...
காத்திருக்கிறேன் கனவுகளோடு ....................

Thursday, February 17, 2011

காதல் கடிதம்




எனக்கு தெரியாமல்என்னிடம்  வந்தது ….
அதை உனக்கு தெரியபடுத்த எனக்கு தெரியவில்லை....
ஆனாலும் உன் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள விளைகிறேன்...
தெரிந்தும் தெரியவில்லை என்று சொல்லிவிடாதே.....
ஏன் புரிந்திந்தும் பிரிந்து  இருகிறாய் ….
விரைவில் உன் விருப்பதை அறிய விரும்புகிறேன் ….

தலைகனம்

தலைவலிக்கு மருந்துண்டு
ஆனால் தலைகனத்திற்கு ???
மன பாரத்தை இறக்கி வைக்க தோழி
ஆனால் தலை பாரம் தோழியிடமே???
விரும்பியதை எல்லாம் கொடுப்பாள்   
அனால் விட்டு கொடுக்க மாட்டால்

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008