Saturday, May 2, 2009

உன்னால் ....

சுட்டெரிக்கும் சூரியனும் சுருங்கி போனது
வட்டமிடும் வெண்ணிலவும் வலு இழந்தது
ஆர்பரிக்கும் அலைகளும் அமைதியானது
வீசும் புயலும் வீரியம் இழந்தது
கொழுந்து விடும் நெருப்பும் குலைந்து போனது
உன் முகம் பொலிவிளைந்ததால் ....

பாரம் ...


பூமித்தாயே ....
என்னை மன்னித்து விடு
இன்று உன் பாரத்தை அதிகரித்து விட்டேன்
ஏன் என்றால் என் மனம் பாரமாக உள்ளது ....

மயில் ...

கண்கவர் வர்ணம் பல கொண்டு
வானளவ நீ பறந்தால்
என் மனம் பறக்கிறது உன் அழகுசொலையில் .....

மலர்வாய்...


அந்தியில் மறையும் கதிரவன்
அதிகாலை மலர்ந்த மலரை கண்டு
சொன்னது
நான் மறைகிறேன்
நீ மலர்கிறாய் .....

கவிதை ....

பக்கம் பக்கமாய் கவிதை எழுதினேன்
அவை அனைத்தும் பறந்து போனது
உன் கண்கள் தீட்டிய கவிதையால் .....

உன் புகழ் ...

கேளாத காதும் கேட்கும்
உன் மௌன மொழியை
காணாத கண்ணும் காணும்
உன் முக சிரிப்பை
பேசாத இதழும் பேசும்
உன் பெயர் சுவையை .....

தேடினேன் ...


எங்கெங்கோ தேடினேன் எங்கயும் நீ இல்லை
எப்பொழுதும் தேடினேன் ஒரு பொழுதும் நீ இல்லை
என்னாலும் தேடினேன் ஒரு நாளும் நீ இல்லை
பின்பு
என்னுள் தேடினேன் மலராய் மலர்ந்திருந்தாய்
மகிழ்ச்சியில் துளைத்தேன்
மனதையும் துளைத்தேன்
மகிழ்ச்சியோடு !!!!!!!

கனவு ...


கனவுகளோடு கவிதை எழுதினேன் என் காதலிக்காக
கனவுகள் களைய காணமல் போனது
கவிதை அல்ல என் காதலி ......

சுனாமி ...


பறவையே உன்னால் மட்டும் தான் பறக்க முடியுமா ?
என்னாலும் முடியும் என்று உயர பறந்தது கடல்
அதன் விளைவுதன் சுனாமி ......

Wednesday, March 11, 2009

அர்ச்சனை ...


"அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு
அதிர்ஷ்டங்களை தரச்சொல்லி வேண்டினால்
என் தெய்வம் அதிர்ஷ்டங்களை தல்லி வைத்து
அர்ச்சனைகளை வாங்கித் தருகிறது
தினமும் அம்மா விடம் !!!! "

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008