காத்திருக்கிறேன்...
எழுதி வைத்தான் கடவுள் இவனொடுதான் என்று
அதன் படி என்னைக் காண வந்தான் சுற்றத்தோடு
அளவான அலங்காரத்துடன் என்னை அழைத்து வந்தால் என் அக்கா
அனைவரையும் வணங்க சொல்ல அதையும் அழகாக செய்தேன் ....
பின்பு அமர சொன்னார்கள் .......அமர்ந்தேன் தந்தையின் அருகில்
சிறிது வெக்கத்துடன் தலை குனிந்து .....
முழுதாய் பார்க்க வில்லை என்றாலும் முடிந்தவரை பார்த்தேன் ...
முதல் பார்வையிலேயே தோன்றிற்று இவன் தான் என்னவனோ என்று (அவனுக்கும் தோன்றிருகுமோ???).....
எங்கிருந்தோ ஒரு குரல் .... "மாப்பிள்ளை பொண்ணு கிட்ட பேசனுமாம் "....அதுவரை அமைதியாய் இருந்த என் மனம்
படபடத்தது பட்டாம் பூச்சியின் சிறகைப் போல ....என்னை நானே அமைதிப்படுத்திக் கொண்டேன் ...
அழைத்து சென்றார்கள் ஓர் அறைக்குள் .....
அடக்கமாய் அமர்ந்தேன் அவருக்கு எதிரில் ...
அன்பாய் சில கேள்விகள் அவரிடம் இருந்து ....
அதற்கு பண்பாய் நான் பதில் சொல்ல ......
விடை பெற்றார்கள் விருப்பத்துடன்.....
சில நாட்கள் கழிந்தன ....
இருபுறமும் சம்மதக்கொடி பறந்தன ....
கை கோர்க்கும் நாளும் குரித்தாயின...
பின்பு என்ன .... மனம் ஆகும் முன் மனப் பரிமாற்றம் தான் ...
தினம் தினம் சந்திப்பு ....சில மணி நேர பேச்சு ....
காத்திருப்பது கடினம் தான் ஆயினும் காலத்தின் கட்டாயம் ...
காத்திருக்கிறேன் கனவுகளோடு ....................
1 comments:
Really Super Simple but a lot in it
Post a Comment