Thursday, February 17, 2011

காதல் கடிதம்




எனக்கு தெரியாமல்என்னிடம்  வந்தது ….
அதை உனக்கு தெரியபடுத்த எனக்கு தெரியவில்லை....
ஆனாலும் உன் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள விளைகிறேன்...
தெரிந்தும் தெரியவில்லை என்று சொல்லிவிடாதே.....
ஏன் புரிந்திந்தும் பிரிந்து  இருகிறாய் ….
விரைவில் உன் விருப்பதை அறிய விரும்புகிறேன் ….

தலைகனம்

தலைவலிக்கு மருந்துண்டு
ஆனால் தலைகனத்திற்கு ???
மன பாரத்தை இறக்கி வைக்க தோழி
ஆனால் தலை பாரம் தோழியிடமே???
விரும்பியதை எல்லாம் கொடுப்பாள்   
அனால் விட்டு கொடுக்க மாட்டால்

Friday, April 9, 2010

மண மேடை....


மண மேடையில் அடையாளம் மாற்றி
என்னவனோடு செல்லுகையில்
அருவி என் அன்னையின் கண்ணில்
ஆனந்தம் என் தந்தையின் கண்ணில்
அனைத்தையும் கழைந்து
அழைத்து சென்றான் என்னவன் ....

பக் பிக்ஸ்....


எவனோ கிறுக்கிய கிறுக்கலில்
எழுத்துப் பிழையாம்
பிழை அறிந்து சரி செய்தால்
அதற்கு பரிசோதனை வேறு ...

Thursday, December 24, 2009

மழைத்துளி ...


மண்ணும் மழைத்துளியும் சேர்ந்திருக்கும்
நேரம் சிறிதாக இருந்தாலும்
அவை சேர்ந்து தரும் மணம்
விண்ணிலும் வீசும்
அது போல தான்
நாமும் நம் நட்பும் ....

மௌனம் ...

மௌன மொழியின் அர்த்தம் அறிந்தேன்
நீ என் அருகில் இருக்கையில்
உன் பிரிவு எடுத்து சென்றது என் மௌனத்தை ....

சில ....


பார்த்த நாட்கள் சில
பழகிய நாட்கள் சில
பகிர்ந்த நாட்கள் சில
பேசிய நாட்கள் சில
நாட்கள் சிலவாயினும்
நட்பு பலவாயின .....

நட்பு....

I wrote this poem for  my  friend smita ...


   


நட்பு பிறந்தது என் நா
உரைத்த "ஹாய்" இல்
நட்பு வளர்ந்தது நம்
மொழி பரி மாற்றத்தால்
நட்பு சிறந்தது நம்
சிறு நகையால்
நட்பு பெருகியது நம்
பெயர் வரிசையால்
நட்பு மலர்ந்தது
நம் நட்பின் மணம் கமழ்ந்தது
மற்றவர் இடையில்
புகழ்பவர் புகழ்ந்தார்
இகழ்பவர் இகழ்ந்தார்
பிரிக்க முயன்றவர் சிலர்
பிரிந்தும் ஒன்றாய் இருந்தோம்
இனியும் இருப்போம் என்ற உறுதியுடன் .....

சாதனை ...



கண்ணுக்குள் ஒளிந்து
கனவில் பிறந்து
கற்பனையில் வளர்ந்து
காலங்களில் கலந்து
கடைசியில் என்னை அடைந்தது - சாதனை

காத்திருந்தேன் ....




காத்திருப்பதன் கொடுமை கலைந்தது
அவள் வருகையை பார்த்திருந்ததால் ....

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008