Wednesday, March 11, 2009

அர்ச்சனை ...


"அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு
அதிர்ஷ்டங்களை தரச்சொல்லி வேண்டினால்
என் தெய்வம் அதிர்ஷ்டங்களை தல்லி வைத்து
அர்ச்சனைகளை வாங்கித் தருகிறது
தினமும் அம்மா விடம் !!!! "

Wednesday, March 4, 2009

என்னுள் நீ ....


"என்னுள் நீ , உன்னுள் நான்(?)
என்றிருக்கும் போது
நீ நலம் இல்லை என்றால்
உனக்குள் இருக்கும்
நான் மட்டும் எப்படி நலமாய் இருப்பது
பத்திரமாக பார்த்துக்கொள்
உன்னையும் உன்னுள் இருக்கும் என்னையும் !!!!!!"

உணர்வுகள் ....


"உடலால் பிரிந்திருந்தலும்
உணர்வுகளால் ஒன்றாய் இருந்தோம்
இன்று என் உணர்வுகளும் துடித்தன
உன் உடல் நிலை சரி இல்லாததால் !!!!!!!!"

கொடியது ....


"மரணத்திலும் கொடியது


தோழி நலமாய் இல்லை


என்றறிந்தும் நாடிச் சென்று


பேசி பார்க்க முடியாத நிலை !!!!!"

Monday, February 23, 2009

கடல் அலை ..


"கடலின் அலையை ரசித்தோம் ஒன்றாய்
இன்று என் கண்கள் கடலானது உன் பிரிவால்
அதில் சுனாமி வரும் முன்
வந்து விடு என்னிடம் !!!!"

காதலித்தேன் ....


"காதலித்தால் தான் கவிதை வரும் என்றால்
ஆம் காதலித்தேன்
நெருப்பின் நிறத்தை
மண்ணின் மணத்தை
நீரின் சுவையை
காற்றின் மொழியை
வானின் அழகை
காதலித்தேன் !!!!!!!!!"

ஓவியம் ...


"காதல் காவியம் தீட்ட மை கொஞ்சம் கேட்டேன்
அதில் பொய் ஒன்றும் இல்லை
பின்பு தான் தெரிந்தது தீட்டியது
காவியம் அல்ல காதலியின் ஓவியம் என்று !!!!!"

சமத்துவம் ...


"சமாதியிலும் சமத்துவம் இல்லை என்றால்
சாதிக்குத்தான் சமாதி கட்ட வேண்டும் !!!!"

என்றும் அழியாது ...


"நெருப்பிலும் கருகாது
நீரிலும் மூழ்காது
காற்றிலும் கரையாது
மண்ணிலும் மக்காது
வானிலும் அழியாது
நான் உன் மீது கொண்ட நட்பு !!!!!!!! "

Sunday, February 22, 2009

மனம் திறக்குமா


"மலர்ந்தால் தான் பூவுக்கும் மணம் உண்டு
மனம் திறந்தால் தான் காதலுக்கும் இடம் உண்டு
மனம் திறக்குமா ?? அவன்  காதலுக்கு இடம் கிடைக்குமா ??? "

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008